நமஸ்கார முறை.🙏
🙏குஞ்சு சுவாமி ஒருமுறை கோவிலூர் மடத்திற்கு யாத்திரை சென்றுவிட்டு திருவண்ணாமலை திரும்பினார்.
🙏திரும்பியவுடன் பகவானிடம், “பகவானே! கோவிலூர் மடாதிபதி மகாதேவ சுவாமி பகவானை ரொம்ப விசாரிச்சார். எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு ரொம்ப பிரியமா கேட்டு தெரிஞ்சுகொண்டார்.
🙏நான் அங்கேயிருந்தபோது ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தரிசனத்துக்கு மடத்துக்கு வந்திருந்தார்' என்று குஞ்சுசுவாமி கூறினார்.
🙏“செட்டியார் என்ன செஞ்சார்?” என்றார் பகவான், அர்த்த புஷ்டியுடன்.
🙏'அங்க வஸ்திரத்தை எடுத்து இடுப்புலே கட்டிக்கொண்டு ரொம்ப பணிவா சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணார்' என்றார் குஞ்சுசுவாமி.
🙏“நீ நமஸ்காரம் பண்ணினியோ?” என்றார் பகவான்.
🙏தயங்கியபடியே 'இல்லை' என்றார் குஞ்சுசுவாமி.
🙏“ஏன் பண்ணலே?” என்றார் பகவான்.
🙏உங்களுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வேற யாருக்கும் பண்றது எனக்கு சம்மதமா இல்லே' என்றார் குஞ்சுசுவாமி.
🙏பகவான் கடுமையானார்.
🙏“ஆஹா! நீ பகவானை ரொம்ப தெரிஞ்சவனோல்லியோ! ரொம்ப புத்திசாலி. இந்த சோபாவுலே இருக்கற அஞ்சடி உடம்பா உன் பகவான்?
🙏இந்த ஹால்லே தான் பகவான் இருக்காரா?
🙏வேறெங்கும் இல்லே பாரு.
🙏இவ்வளவு ஏக பக்தி இருக்கறவா எதுக்கு வேற இடங்களுக்குப் போகணும் ?
🙏“வேற மடங்களுக்கு போனா அங்கேயிருக்கும் சம்பிரதாயத்தை அனுசரிக்கணும்.
🙏“எங்கே, யாருக்கு நமஸ்காரம் பண்ணினாலும் குருவோ, இஷ்ட தெய்வமோ அங்கே இருக்கறதா தியானிச்சு நமஸ்காரம் பண்ணினா சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்துடும்.
🙏இதுதான் முறை” என்றார் பகவான்.
நமஸ்காரம்.🙏
No comments:
Post a Comment