A small request

Please visit the site of an NGO at NOIDA, near Delhi, India and help them by clicking the following link http://Saikripa.org If possible please do help them much as u can!Thanks Thanks

Thursday, April 23, 2026

Monday, April 6, 2026

நவகிரஹங்களின் சிறப்பு.( மகத்துவம் )

 நவகிரஹங்களின் சிறப்பு.( மகத்துவம் )


01) *சூா்யன் —*


காசியப முனிவாின் குமாரா். ஒளிப்பிழம்பானவா். நவக்ரஹங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவா்.

சிம்ஹராசிக்கு அதிபதி. நவகிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவா்.

திக்கு ~ கிழக்கு.

அதிதேவதை ~ அக்னி.

ப்ரத்யதி தேவதை ~ ருத்திரன்.

ஸ்தலம் ~ சூா்யனார் கோவில்.

நிறம் ~ சிவப்பு.

வாகனம் ~ ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்.

தானியம் ~ கோதுமை.

மலா் ~ செந்தாமரை., எருக்கு.

வஸ்திரம் ~ சிவப்பு.

ரத்தினம் ~ மாணிக்கம்.

அன்னம் ~ ரவை., கோதுமை., சர்க்கரைப் பொங்கல்.

    


02) *சந்திரன் —*


பாற்கடலில் தோன்றியவா். தண்ணொளி உடையவா். வளா் பிறையில் சுபராகவும் ( நன்மை செய்பவா் )., தேய்பிறையில் அசுபராகவும் ( தீமை செய்பவா் ) விளங்குபவா்.

கடக ராசிக்கு அதிபதி.

திக்கு ~ தென்கிழக்கு.

அதிதேவதை ~ ஜலம்.

ப்ரத்யதி தேவதை ~ கௌரி.

ஸ்தலம் ~ திருப்பதி.

நிறம் ~ வெள்ளை.

வாகனம் ~ வெள்ளைக் குதிரை.

தானியம் ~ நெல்.

மலா் ~ வெள்ளை அரளி.

வஸ்திரம் ~ வெள்ளாடை.

ரத்தினம் ~ முத்து.

அன்னம் ~ தயிா் சாதம்.


03) *அங்காரஹன் —* ( செவ்வாய் )


இவா் வீரபத்திரா் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவா்., பாவ/புண்ணிய பலனைக் சாியாக கொடுப்பவா்.

மேஷம்., விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

திக்கு ~ தெற்கு.

அதிதேவதை ~ நிலமகள்.

ப்ரத்யதி தேவதை ~ க்ஷேத்திரபாலகா்.

ஸ்தலம் ~ வைத்தீஸ்வரன் கோவில்.

நிறம் ~ சிவப்பு.

வாகனம் ~ ஆட்டுக்கிடா.

தானியம் ~ துவரை.

மலா் ~ செண்பகப்பூ., சிவப்பு அரளி

வஸ்திரம் ~ சிவப்பு ஆடை.

ரத்தினம் ~ பவளம்.

அன்னம் ~ துவரம் பருப்பு பொடி சாதம்.

  


04) *புதன் —*


இவா் சந்திரனுடைய குமாரா். தீமை விளைவிக்கும் கிரஹங்களின் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

மிதுனம்., கன்னி ராசிகளுக்கு அதிபதி

திக்கு ~ வட கிழக்கு.

அதிதேவதை ~ விஷ்ணு.

ப்ரத்யதி தேவதை ~ நாராயணன்.

ஸ்தலம் ~ மதுரை.

நிறம் ~ வெளிர் பச்சை.

வாஹனம் ~ குதிரை.

தானியம் ~ பச்சைப் பயறு.

மலா் ~ வெண்காந்தள்.

வஸ்திரம் ~ வெண்ணிற ஆடை.

ரத்தினம் ~ மரகதம்.

அன்னம் ~ பாசிப்பருப்பு பொடி சாதம்.

   


05) *குரு —*


இவா் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவா். இவருடைய பாா்வையால்., தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண நன்மை செய்பவா்.

தனுா்., மீன ராசிகளுக்கு அதிபதி.

திக்கு ~ வடக்கு.

அதிதேவதை ~ பிரம்மா.

ப்ரத்யதி தேவதை ~ இந்திரன்.

ஸ்தலம் ~ திருச்செந்தூர்.

நிறம் ~ மஞ்சள்.

வாகனம் ~ மீனம்.

தானியம் ~ கொத்துக்கடலை.

மலா் — மஞ்சள் வண்ண மலா்கள்.

வஸ்திரம் ~ மஞ்சள் நிற ஆடை.

ரத்தினம் ~ புஷ்பராகம்.

அன்னம் ~ கடலைப் பொடி சாதம்., சுண்டல்.

   


06) *சுக்கிரன் —*


இவா் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். நன்மை செய்பவா். ரிஷபம்.,

துலாம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு ~ கிழக்கு.

அதிதேவதை ~ இந்திராணி.

ப்ரத்யதி தேவதை ~ தன்வந்தாி ( மருத்துவன் )

ஸ்தலம் ~ ஸ்ரீரங்கம்.

வாஹனம் ~ முதலை.

தானியம் ~ மொச்சை.

மலா் ~ வெண் தாமரை.

வஸ்திரம் ~ வெள்ளாடை.

ரத்தினம் ~ வைரம்.

அன்னம் ~ மொச்சைப் பொடி சாதம்.



07) *சனீஸ்வரா் —*


இவா் சூா்யனுடைய குமாரா். புண்ணிய/பாவ பலன்களை தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவா். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை., கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.

மகரம்., கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு ~ மேற்கு.

அதிதேவதை ~ யமன்.

ப்ரத்யதி தேவதை ~ பிரஜாபதி.

ஸ்தலம் ~ திருநள்ளாறு

நிறம் ~ கருநீலம்.

வாஹனம் ~ காகம்.

தானியம் ~ எள்.

மலா் ~ கருங்குவளை., வன்னி.

வஸ்திரம் ~ கருநீல நிற ஆடை [ பொதுவாக எல்லா கோவில்களிலும் கருப்பு வண்ண ஆடை அணிகின்றாா்கள் ]

ரத்தினம் ~ நீலம்

அன்னம் ~ எள்ளுப்பொடி சாதம்.



08) *ராகு —*


இவா் அசுரத்தலையும்., நாக உடலும் உடையவா். மிகுந்த வீரம் உடையவா். கருநாகம் என்று அழைக்கப் படுபவா்.

திக்கு ~ தென் மேற்கு.

அதிதேவதை ~ பசு.

ப்ரத்யதி தேவதை ~ பாம்பு.

ஸ்தலம் ~ காளஹஸ்த்தி.

நிறம் ~ கருமை.

வாகனம் ~ நீல சிம்மம்.

தானியம் ~ உளுந்து.

மலா் ~ மந்தாரை.

வஸ்திரம் ~ கருப்பு நிற ஆடை [ பொதுவாக எல்லா கோவில்களிலும் நீல வண்ண ஆடை அணிகின்றாா்கள் ]

ரத்தினம் ~ கோமேதகம்.

அன்னம் ~ உளுத்தம் பருப்புப்பொடி சாதம்.



09) *கேது —*


இவா் நாகத்தலையும் அசுர உடலும் உடையவா். சிகி என்றும்., செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவா்.

திக்கு ~ வட மேற்கு.

அதிதேவதை ~ சித்திரகுப்தன்.

ப்ரத்யதி தேவதை ~ பிரம்மன்.

ஸ்தலம் ~ காளஹஸ்த்தி.

நிறம் ~ செம்மை.

வாஹனம் ~ கழுகு.

தானியம் ~ கொள்ளு.

மலா் ~ செவ்வல்லி.

வஸ்திரம் ~ பல நிற ஆடை.

ரத்தினம் ~ வைடூரியம்.

அன்னம் ~ கொள்ளுப்பொடி சாதம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Not getting sleep, follow this



 

How Aadhar Misused

 



India's Unknown History Of 500 Years Of Resistance Against Invasions