A small request

Please visit the site of an NGO at NOIDA, near Delhi, India and help them by clicking the following link http://Saikripa.org If possible please do help them much as u can!Thanks Thanks

Tuesday, December 3, 2024

குமரகுருபரர் (WhatsApp info)

 குமரகுருபரர்

     (1625 - 18 மே 1688)   

                   🪷


தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர்.


45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர்.


குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். 


ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. 


குமரகுருபரர் திருவாரூர் சென்று தியாகேசனைப் பாடிவிட்டு தருமபுரத்திற்குப் பயணப்பட்டார். அவ்வாறு செல்லும்போது ஏதோ ஒரு பெரிய விளைவு தனக்கு ஏற்படப்போவதை உணர்ந்தார். தருமபுரத்தில் பாரம்பரிய சைவ மடம் ஒன்று இருந்தது. அதன் பெயர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்பதாகும். அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டு மெய்யுருகி நின்ற "சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாகப் பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாரால் அதை விளக்க முடியும்?


குமரகுருபரர் இதைக் கேட்டதும் வாயடைத்து நின்றார். அவருக்குத் தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர்தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். தேசிகர் ஒரு ஆன்மீக நோக்குடைய நபர் மட்டுமல்லர். சமுதாயத்தின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது. ஆன்மீக ரீதியில் உயரும்போது, சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் ஒருவர் அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதைத் தேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரைப் போன்ற ஆன்மீக ரீதியில் உயர்ந்த, திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒருவரின் தேவையை அவர் உணர்ந்தார். எனவே அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமரகுருபரரின் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் குமரகுருபரரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.


குமரகுருபரர், தருமபுரம் மடத்திற்கு வந்த பிறகு, சைவ சித்தாந்த அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்து, தமிழ் குறித்த தனது அறிவை மேம்படுத்துவதில் பணியாற்றினார். ஒரு சந்நியாசி வாழ்க்கை முறையை வழிநடத்துவதில் அவரது ஆழ்ந்த கற்றல் மற்றும் நேர்மையை உணர்ந்து, மடத்தின் தலைவர்கள் அவருக்கு "தம்பிரான்" என்ற பட்டத்தை வழங்கினர். 


பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார்.  இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது.


குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர். முருக பக்தராகவும், மீனாட்சிபக்தராகவும், சரஸ்வதி பக்தராகவும் திகழ்ந்தவர். 


 காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர். இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார். முருகப் பெருமானையே சிந்தனை செய்து வாழலானார் குமரகுருபரர் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அவர் தன் பெற்றோரை அழைத்தார்.


இந்த உலகிற்கு நான் வரக் காரணமானவர்கள் நீங்கள். இப்பிறவியில் நீங்களே என் தாய், தந்தை ஆனால் எல்லா ஆன்மாக்களுக்கும் என்றென்றும் தாயாகவும் தந்தையாகவும் பரம்பொருளை நாடுகிறது என் உள்ளம். நான் துறவுநெறியில் ஈடுபட்டுத் தமிழையே துணையாய்க் கொண்டு வாழ விரும்புகிறேன். உங்களை நான் பிரிந்து செல்வதாக எண்ணலாகாது. உங்களுக்கும் சொந்தமான முருகன் அருள் உங்களை எப்போதும் காத்து நிற்கும்! கடவுள் துணை உங்களுக்கும் இருக்கும்போது நான் என்கிற இந்த மனிதத் துணை தேவையில்லை. ஒரே ஊரில் நான் வாழ்வதை விரும்பவில்லை. பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு ஆலயங்களை தரிசித்து அங்குள்ள தெய்வங்கள் பற்றியெல்லாம் பாடல் புனைய விழைகிறேன்! தன் அருமைப் புதல்வன் பேசிய பேச்சைக் கேட்டுக் கவிராயரின் கண்கள் கசிந்தன. பிள்ளைக்கு மணமுடித்துப் பேரன் பேத்தியைப் பார்க்க எண்ணியிருந்த சிவகாச சுந்தரி செய்வதறியாது திகைத்தாள். அப்போது முருகன் அவள் ஏற்கெனவே தன் சன்னதியில் சொன்ன வாசகத்தை அவள் ஆழ்மனத்தில் நினைவுபடுத்தினான். முருகன் அருளால் பிறந்த குழந்தை முருகனிடமே இவனை ஒப்படைப்போம் என்றல்லவா அன்று சொன்னாள்? முருகன் திருவருளால் இத்தனை ஆண்டு காலம் குமரகுருபரனோடு வாழும் பேறு கிடைத்தது. மற்றபடி முருகன் சன்னதியில்தானே இவன் கவிமழை பொழியத் தொடங்கினான்? அன்றே முருகன் இவனை ஆட்கொண்டு விட்டான்.  தன் பிள்ளையாகத் தமிழன்னைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அவள் புரிந்துகொண்டாள். கண்ணீர் வழிய வழிய அவனை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாள். விம்மிய உதடுகளைத் துண்டால் மறைத்துக் கொண்டு கவிராயரும் அவனுக்கு விடைகொடுத்தார். பெற்ற பிள்ளை எப்போதும் பெற்றோருடன் இருந்தால்தான் ஆயிற்றா? அவன் எங்கிருந்தாலும் அவன் புகழைக் கேட்கும்போதெல்லாம் தாங்கள் பெற்ற பிள்ளை என்ற ஆனந்தம் அவனால் கிடைக்கத்தானே போகிறது? அந்த ஆனந்தத்திற்கு விலையேது? குமரகுருபரன் தங்களின் தற்காலிகக் குழந்தைதான். அந்த உறவு நிலையல்ல, செந்தூர்க்குமரனே தங்களின் நிரந்தரக் குழந்தை, கடவுளே நிலையான உறவு என்பதை அவர்கள் மனம் புரிந்துகொண்டு ஆறுதல் அடையத் தொடங்கியது. எஞ்சிய வாழ்வைச் செந்தூர் முருகன்மேல் பக்தி செலுத்தி அவர்கள் வாழலானார்கள்.


 வாய்பேசாத குழந்தைக்குக் கடவுள் அருளால் வாய்ப்பேச்சு வந்ததும், பெற்றவர்கள் சில ஆண்டுகள் அவனை வளர்த்துக் கடவுள் பணிக்கே அவனைத் தந்ததும், உறவுகளைத் துறந்து அவன் துறவியாக வாழ்ந்ததும் குமரகுருபரன் கதை.


 காசியில் தங்கி இறைவனுக்குச் சேவை செய்து வந்தவர், வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள் (1.6.18) இறைவனடி சேர்ந்தார்.! இந்த நாளில்தான் அவருக்குக் குருபூஜையும் நடைபெறுகிறது.!


எழுதிய நூல்கள்


கந்தர் கலிவெண்பா

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

மதுரைக் கலம்பகம்

நீதிநெறி விளக்கம்

திருவாரூர் நான்மணிமாலை

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பரச் செய்யுட்கோவை

பண்டார மும்மணிக் கோவை

காசிக் கலம்பகம்

சகலகலாவல்லி மாலை

மதுரை மீனாட்சியம்மை குறம்நமதுரை மீனாட்சி அம்மை குறம்

மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை

தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை

கயிலைக் கலம்பகம்

காசித் துண்டி விநாயகர் பதிகம்.


தமிழ் மொழியிலே பக்தி மணங்கமழும் பனுவல்களைப் பாடிய புலவர்களுள் குமரகுருபரருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. குமரகுருபரர் பாடிய கந்தர் கலிவெண்பா என்ற பாடல் மிகவும் சக்தி வாய்ந்த முருகன் தோத்திரப் பாடலாகும். உத்தியோக உயர்வு, வழக்குகளில் வெற்றி, அளவற்ற செல்வம், உடல் ஆரோக்கியம் அனைத்தையும் இந்நூலைப் பாராயணம் செய்பவர் அடைவர். குமரகுருபரர் சரசுவதியைத் துதித்துப் பாடிய சகலகலாவல்லி மாலை பாடல் பிறந்த கதை அதிசயமானது. பத்துப் பாடல்கள் கொண்ட இந்நூல் நித்தியபாராயண நூலாக இன்றும் விளங்குகிறது. ஏராளமான துதிகள் இருப்பினும், சகலகலாவல்லி மாலை உடனடிப்பலனைத் தரவல்ல அற்புதப்பாடலாகும். அதிவிரைவில் பலனளிக்கவல்ல இத்துதி, முகலாய அரசன் ஒருவனிடமிருந்து சிவன்கோயிலிற்கு நிதி பெற எண்ணிய குமரகுருபரர்க்கு சரஸ்வதிதேவி அருள்புரிந்த அற்புத சம்பவத்தை ஒட்டி அவரால் இயற்றப்பட்டது.


ஒருமுறை குமரகுருபரர், காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம் வேண்டிப் பெற்று, பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்தி குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியை துதித்து சகல கலாவல்லி மாலையென்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச் செல்வது என குமரகுருபரர் யோசித்துக்கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்து வந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.


பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபை அது. அதில் குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவ சமயத்திலும் ஆர்வங் கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவ சித்தாந்த உரையைக் கேட்டு அக மகிழ்ந்தான். அவருக்கு யாது செய்ய வேண்டும் எனக் கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக் கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறு கோயில் கட்டி நித்திய பூஜைகள் நியமப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், குமரகுருபர ஸ்வாமிகள்தான். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல்


வெண்டாமரைக்கன்றி நின்பதம்.

தாங்க என் வெள்ளை உள்ளத்

தண்டாமரைக்குத் தகாது கொலோ!

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்

தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவை கொள் கரும்பே

சகல கலா வல்லியே!


ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச்சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித்துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு.


மாணவர்கள் அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டிய துதி இது. தேர்வெழுதப் போகும் முன் மாணவர்கள் இப்பாடலைச் சொல்லி விட்டுச் சென்றால் ஞாபக சக்தியும் தெளிவுடன் விடைகளைக் குறிப்பிட்டு எழுதும் ஆற்றலும் அவர்கட்கு சரஸ்வதியின் திருவருளால் சித்திக்கும். மேலும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் அவசியம் சொல்ல வேண்டிய பாடல் இது. இப்பாடல் மாணவர்களுக்கு நம்பிக்கையையும், மனத்தெளிவையும், மேலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தித் தேர்வை எதிர்கொள்ளவும் உதவும். ஓம் மனோன் மணியை வாகீஸ்வர்யை மஹாமாயை நமோ நம: என்ற வாகீஸ்வரி மந்திரத்தையும் தினந்தோறும் சொல்லிவர, மதிப்பும் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்!



 ஆண்டு சூன் மாதம் 27-ஆம் தேதி அவர் மீது ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.


 கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக ஆகஸ்டு 31, 1952-இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.


மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதில் நீதிநெறி விளக்கம் என்ற நூல் பெயர் பெற்றது.


எழுதிய நூல்கள்


கந்தர் கலிவெண்பா

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

மதுரைக் கலம்பகம்

நீதிநெறி விளக்கம்

திருவாரூர் நான்மணிமாலை

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பரச் செய்யுட்கோவை

பண்டார மும்மணிக் கோவை

காசிக் கலம்பகம்

சகலகலாவல்லி மாலை

மதுரை மீனாட்சியம்மை குறம்,

மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை

தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை

கயிலைக் கலம்பகம்

காசித் துண்டி விநாயகர் பதிகம்


குமரகுருபரரைப் பாடியோர்


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.

சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார்.

பாரதிதாசன் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் சுவாமிகளைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.


                🪷🪷🪷

                 🙏🙏🙏


Friday, November 29, 2024

பகவானுக்கு பிடித்தமான குரு யார் தெரியுமா..?

 

பகவானுக்கு பிடித்தமான குரு யார் தெரியுமா..?

 

 தன்னை நம்பி வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்றுத் தரக்கூடியவர் யார் தெரியுமா.....?

 

இந்தக் கதையை கேளுங்கள்..

 

ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு உண்டு வந்தான்.

 

அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன்..

  

 சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான்.

 

 அதற்கு  அந்த மகான் அது உன் தலையில் எழுதிய விதி.

 

உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார்.

பிச்சைக்காரன்,  சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

 

அதற்கு சாமியார்...

நீ சிவபெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார்.

 

 பிச்சைக்காரன் சிவபெருமான் பார்க்க புறப்பட்டான்.

 

வெகுநேரம் ஆகியதால் இரவு ஓய்வு எடுக்க ஓர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஓய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்கிறான்...

 

செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள்

 

பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க.

அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஓர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று சிவபெருமானிடம் கேட்டு எங்களுக்கு சொல்லவேண்டும் என்றனர்.

 

அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான்...

 

வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலை வந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில்,   ஒரு மந்திரவாதி அங்கு வருகிறார்.

 

அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன்.

அதற்காக நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார்.

 

 பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன். நீ சிவபெருமான் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்லவேண்டும் என்றார்.

 

அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையை கடந்து பிச்சைக்காரனை விட்டு சென்றார்.

 

மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன். அப்போது ஓர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் சிவபெருமான் இருக்கும் இடத்திற்க்கு செல்லமுடியும். ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமை வந்தது.

 

அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ சிவபெருமானிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும்.

அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு சொல்கிறாயா..என்று கேட்டது

 

ஆற்றை கடந்து பிச்சைக்காரனை மறுபுறம் விட்டது.

 

பிச்சைக்காரனும் ஒருவழியாக சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான்.

 

சிவபெருமானை பார்த்து ஆசி பெற்றான். சிவபெருமான் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேள் என்றார்.

 

*ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார்.

 

பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். சிவபெருமான் மூன்று தான் கேட்க வேண்டும் என்கிறார்.  என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான்.

 

சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்தாவது நமது காலத்தை ஒட்டிவிடலாம்.

ஆனால் நம்மை நம்பிய  அந்த மூன்று பேர்களின் பிரச்சினை நிச்சயமாக தீரவேண்டும். என்று எண்ணினான்

 

மூன்று பேரின் பிரச்சனையை சிவபெருமானிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பிவருகிறான்.*

 

*_முதலில் ஆமை என் கேள்விக்கு சிவன் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஓட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான்.

 

 உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்ததுவிட்டு பறந்துசென்றது.

 

 அந்த ஓட்டில் பவளமும், முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்._*

 

*மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை கைவிடவேண்டும் என்றான்.

 

மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார்.*

 

மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ.

அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைகாரன்.

 

மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டாள் ….,

 

செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார்....

 

   அன்று முதல் அவன் ஒரு செல்வந்தராகவும் எதையும் மாற்றும்  மந்திரகோல்,

இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்._*

 

*இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால்...

 

நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால்

நமது துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும்.*

 

*அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுதமுடியும்...

 

இதை உணர்ந்த நல்ல குருநாதர் யாரோ அவரே சுயநலமாக வாழாமல் பிறருக்காக பகவானிடம் கோரிக்கைகளை வைத்து அவரை நம்பியவரை நல்வழி படுத்துவார்....

ஓம் குருவின் குருவே சரணம்

ஓம் நமச்சிவாய 🙌🙇


Received in WhatsApp

Wednesday, October 16, 2024

ANCIENT INDIAN HEALTH TIPS IN SANSKRIT TRANSLATED IN ENGLISH


ANCIENT INDIAN HEALTH TIPS IN SANSKRIT TRANSLATED IN ENGLISH


A MUST READ


1. अजीर्णे भोजनं विषम् ।


If previously taken Lunch is not digested..

Taking Dinner will be equivalent to taking Poison. 

Hunger is one signal that the previous food is digested 


2. अर्धरोगहरी निद्रा ।

Proper sleep cures half of the diseases..


3 मुद्गदाली गदव्याली ।

Of all the Pulses, Green grams are the best. 

It boosts Immunity. 

Other Pulses all have one or the other side effects. 


4. भग्नास्थि-संधानकरो लशुनः।

Garlic even joins broken Bones.. 


5. अति सर्वत्र वर्जयेत्।

Anything consumed in Excess, just because it tastes good, is not good for Health. Be moderate. 


6. नास्ति मूलमनौषधम् ।

There is No Vegetable that has no medicinal benefit to the body.. 


7.  न वैद्यः प्रभुरायुषः ।

No Doctor is capable of giving Longevity. (Doctors have limitations.) 


8. चिंता व्याधि प्रकाशाय ।

Worry aggravates ill-health.. 


9. व्यायामश्च शनैः शनैः

Do any Exercise slowly.

(Speedy exercise is not good.) 


10. अजवत् चर्वणं  कुर्यात् ।

Chew your Food like a Goat.

(Never Swallow food in a hurry. 

Saliva aids first in digestion.) 


11.  स्नानं नाम मनःप्रसाधनकरंदुः स्वप्न-विध्वंसनम् ।

 Bath removes Depression.

 It drives away Bad Dreams.. 


12. न स्नानमाचरेद्  भुक्त्वा।

Never take Bath immediately after taking Food.  (Digestion is affected). 


13. नास्ति मेघसमं तोयम् ।

No water matches Rainwater in purity.. 


14.  अजीर्णे भेषजं वारि ।

When there is  indigestion taking plain water serves like medicine.


15. सर्वत्र नूतनं  शस्तं, सेवकान्ने पुरातने ।

Always prefer things that are Fresh.. 

Whereas Rice and Servant are good only when they are old.


16. नित्यं सर्वा रसा भक्ष्याः ।।

Take the food that has all six tastes.

(viz: Salt, Sweet, Bitter, Sour, Astringent and Pungent). 


17. जठरं पूरायेदर्धम् अन्नैर्, भागं जलेन च ।

वायोः संचरणार्थाय चतर्थमवशेषयेत् ।।

Fill your Stomach half with Solids, 

(a quarter with Water and rest leave it empty.)


18. भुक्त्वा शतपथं गच्छेद् यदिच्छेत् चिरजीवितम् ।

Never sit idle after taking Food.

Walk for at least half an hour. 


19. क्षुत्साधुतां जनयति ।

Hunger increases the taste of food..

In other words, eat only when hungry.. 


20. चिंता जरा नाम मनुष्याणाम्

Worrying speeds up ageing.. 


21. शतं विहाय भोक्तव्यं, सहस्रं स्नानमाचरेत् ।

When it is time for food, keep even 100 jobs aside. 


22. सर्वधर्मेषु मध्यमाम्।

Choose always the middle path. Avoid going for extremes in anything


Goldern words of wisdom in Sanskrit by our sages.


Please share with your loved ones..

Thank you 🙏 😊


(received in WhatsApp)

Tuesday, June 4, 2024

நாயன்மார்கள்

 *63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்...!*


1. திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.


2. இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.


3. இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.


4. மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.

இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.


5. விறல்மிண்டர்:

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.


6. அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.


7. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.


8. ஏனாதிநாதர்:

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.


9. கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.


10. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.


11. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.


12. அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.


13. ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.


14. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.


15. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.


16. உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.


17. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.


18. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.


19. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.


20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.


21. குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.


22. பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.

சுந்தரருடன் கயிலை சென்றவர்.


23. காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.


24. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.


25. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்.


26. நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.


27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.


28. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.


29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.


30. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.


31. மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.


32. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.


33. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.


34. சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.


35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.


36. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.


37. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.


38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.


39. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.


40. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.


41. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை

நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.


42. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.


43. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.


44. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.


45. ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.


46. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.


47. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.


48. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.


49. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.


50. முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.


51. கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.


52. இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.


53. செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.


54. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.


55. கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.


56. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்

பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.


57. மங்கையர்க்கரசியார்சை:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.


58. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.

எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.


59. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.


60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.


61. சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.


62. இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.


63. சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.


*"நாயன்மார்கள் திருவடிகளே சரணம்"*


(வாட்ஸ்அப் உபயம்)

Friday, May 31, 2024

5 golden rules of Ayurveda

 https://www.instagram.com/reel/C7oxLE6hAqa/?igsh=MTg0bzhmZjd4NHdoaQ==

Sunday, May 26, 2024

சமையல் குறிப்புகள் - வாட்ஸ்அப் உபயம்

 🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!


*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.


*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.


*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.


*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.


*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.


*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.


*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.


*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது


.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.


*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது


*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.


*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.


*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.


*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.


*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.


*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.


*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.


*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.


*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்


. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும


*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.


*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.


*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.


*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.


*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.


*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்


*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.


*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.


*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.


*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்


*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.


*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.


*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.


*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.


*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.


*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.


*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.


*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.


*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.


*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்


. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

#Tamilfoods

Sunday, May 5, 2024

Sri Dushyant Sridhar's Ramayana

 Sri Dushyant Sridhar's Ramayana


(1) Listen to 292 episodes in simple 'Indian-accent' English (15 min each) on the #ramayana here:


Bala Kandam - www.tinyurl.com/balakandambyds


Ayodhya Kandam - www.tinyurl.com/ayodhyakandambyds


Aranya Kandam - www.tinyurl.com/aranyakandambyds


Kishkindha Kandam - www.tinyurl.com/kishkindhakandambyds


Sundara Kandam - www.tinyurl.com/sundarakandambyds


Yuddha Kandam - www.tinyurl.com/yuddhakandambyds