A small request

Please visit the site of an NGO at NOIDA, near Delhi, India and help them by clicking the following link http://Saikripa.org If possible please do help them much as u can!Thanks Thanks

Friday, February 27, 2026

காலத்தை அளந்த கோவில்


"கடிகாரம் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்... வான்வெளித் தொலைநோக்கிகள் உருவாவதற்கு முன்னால்... ஏன், ஒரு வருடம் என்பது முன்னூற்று அறுபத்தைந்து கால் நாட்கள் ($365.25$) என்பதை ஐரோப்பா கண்டறிவதற்குப் பல காலத்திற்கு முன்னால்...

இந்தியாவின் தென்கோடியில், கடலும் வானமும் முத்தமிடும் இடத்தில் ஒரு மகா அதியசக் கோவில் எழுந்தது. அதுதான் பத்மநாப சுவாமி கோவில். அனந்தன் எனும் பாம்பின் மீது நித்ய உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்தப் பெருமானின் கோவில், வெறும் பக்திக்கான இடம் மட்டும் அல்ல; அது கல்லால் செதுக்கப்பட்ட ஒரு மகா கால இயந்திரம்!"


*பகுதி 1.நாட்களை எண்ணும் தூண்கள்*


கோவிலின் நீண்ட பிரகாரத்திற்குள் நுழைந்து பாருங்கள். உங்கள் முன்னே முன்னூற்று அறுபத்தைந்து தூண்கள் கம்பீரமாக நிற்கும். அவை பேசாது, அசையாது... ஆனால் அவை காலத்தை எண்ணிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு காலையிலும் சூரியன் கிழக்கில் உதிக்கும்போது, அதன் ஒளி கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, ஒவ்வொரு நாளும் சரியாக ஒரு தூணைத் தொடும். ஒரு நாளைக்கு ஒரு தூண் வீதம், ஒரு வருடத்தின் $365$ நாட்களையும் அந்தத் தூண்கள் எண்ணுகின்றன.

ஆனால், அங்கே ஒரு 'கால் தூண்' (Quarter Pillar) உண்டு. அது மிகச் சிறியது, மறைவாக இருக்கும். மூன்று வருடங்களாக அந்தத் தூண் நிழலிலேயே இருக்கும். ஆனால் நான்காவது வருடம், அதாவது லீப் வருடத்தில் (Leap Year) மட்டும், சூரியனின் கதிர்கள் அந்தத் தூணை முழுமையாக ஒளிரச் செய்யும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள், ஒரு சூரிய வருடம் என்பது வெறும் $365$ நாட்கள் அல்ல, அதில் கூடுதலாக $6$ மணி நேரம் இருக்கிறது என்பதை கல்லிலேயே கணக்கிட்டு விட்டார்கள்!


*பகுதி 2.இறைவனின் திருவடியைத் தொடும் சூரியன்*


வருடத்தில் இரண்டு முறை சூரியன் ஒரு அதிசயத்தைச் செய்கிறது.

• மார்கழி 22 (Winter Solstice): சூரிய கதிர்கள் கருவறைக்குள் நுழைந்து, பள்ளி கொண்ட பெருமாளின் இடது பாதத்தில் சரியாகப் படும்.

• ஆனி 21 (Summer Solstice): அதே சூரிய ஒளி விலகி வந்து பெருமாளின் வலது பாதத்தைத் தொடும்.

• விஷு (Equinox): இரவும் பகலும் சமமாக இருக்கும் நாளில், சூரிய ஒளி சரியாகப் பெருமாளின் பெருவிரலில் படும்—இடதுமில்லை, வலதுமில்லை, சரியாக மையத்தில்!

இதற்கு எவ்வளவு துல்லியமான கணிதம் தேவைப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இது வெறும் பக்தி இல்லை; இது மிக உயர்ந்த நிலப்பரப்பு மற்றும் வானியல் அறிவியல்!


*பகுதி 3.கதவுகள் இல்லாத 49 வாசல்கள்*


கோவிலின் கோபுரத்தைப் பாருங்கள். அது ஏழு அடுக்குகள் கொண்டது. நம் முன்னோர்கள் அந்த வரைபடத்தை ஒரு மலையைப் போலச் செதுக்கினார்கள். அது உங்கள் முதுகெலும்பின் வரைபடம்!

கீழே இருப்பது மூலாதாரம், மேலே இருப்பது உச்சி. இந்த ஏழு அடுக்குகளிலும், ஒவ்வொரு அடுக்கிற்கும் ஏழு ஜன்னல்கள் வீதம் மொத்தம் நாற்பத்தொன்பது ஜன்னல்கள் உள்ளன. ஆனால், இந்த ஜன்னல்களுக்குக் கதவுகளோ, திரைகளோ, கண்ணாடியோ கிடையாது. அவை எப்போதும் திறந்தே இருக்கின்றன.

இதன் தத்துவம் என்ன? ஒரு மனிதன் அறிவில் விழிப்படையும்போது, அவனுடைய புலன் வாசல்கள் (49 வாசல்கள்) கதவுகள் இன்றித் திறந்திருக்க வேண்டும். எதையும் தடுக்கக் கூடாது, எதையும் ஒதுக்கக் கூடாது. உலகம் முழுவதையும் அப்படியே வரவேற்கும் ஒரு விழிப்புணர்வு அது.


*பகுதி 4. மழையிலும் நனையாத கருவறை*


கேரளாவில் அடைமழை பெய்யும்போது, காற்று பலமாக வீசும். கோபுரத்தில் இருக்கும் நாற்பத்தொன்பது ஜன்னல்களும் திறந்தே இருந்தாலும், கருவறைக்குள் மட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது!

இது எப்படி சாத்தியம்? கோவிலின் வடிவமைப்பு அப்படிப்பட்டது. வெளிப்புறக் காற்றிற்கும் உட்புறக் காற்றிற்கும் இடையே ஒரு அழுத்த வேறுபாட்டை உருவாக்கி, ஒரு 'வெற்றிடத் தடையை' (Vacuum Barrier) நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். இது மழையை உள்ளே நுழைய விடாது.

உள் ரகசியம்: வெளியுலகில் போராட்டங்கள் எனும் மழை பெய்தாலும், உங்கள் உள்ளே இருக்கும் 'சித்சபை' (கருவறை) எப்போதும் நனையாமல், அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே இந்தக் கோவில் போதிக்கிறது.


*பகுதி 5.பாம்பு உங்கள் எதிரி அல்ல*


கருவறைக்குள் பத்மநாப சுவாமி ஆதிசேஷன் மீது படுத்திருக்கிறார். அந்த பாம்பிற்கு ஐந்து தலைகள். அது இறைவனின் காலடியில் இல்லை; அது இறைவனின் மொத்த உடலையும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

நூற்றாண்டுகளாக நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன? 'பாம்பு' என்பது கீழே சுருண்டு கிடக்கும் ஒரு சக்தி, அதை நாம் அடக்கி மேலே கொண்டு வர வேண்டும் என்று. ஆனால் இந்தக் கோவில் வேறொரு ரகசியத்தைச் சொல்கிறது:

பாம்பு உங்கள் எதிரி அல்ல; அது உங்கள் ஆதாரம்!

உங்கள் முதுகெலும்புதான் அந்த நாகம். உங்கள் விழிப்புணர்வுதான் அந்தப் பெருமான். நீங்கள் உங்கள் முதுகெலும்பை (பாம்பை) எதிரியாக நினைக்காமல், அதன் மீது நம்பிக்கை வைத்துச் சாயும்போதுதான், உங்களுக்குள்ளே இருக்கும் அந்தப் பேரறிவு விழித்துக் கொள்ளும்.


*பகுதி 6. நம் காலத்துச் சாட்சிகள்*


*1.விழித்தெழுந்த ராஜதந்திரி*


செப்டம்பர் 23, 2026 அன்று அதிகாலையில் சசி தரூர் அந்தக் கோவிலின் முன் நின்றார். அவர் ஒரு பக்திமானாக வரவில்லை; ஒரு நவீன மனிதனாக வந்தார். சூரியன் உதித்து, கோபுரத்தின் ஒவ்வொரு ஜன்னல் வழியாக வரிசையாக ஒளி உள்ளே நுழைவதைக் கண்டு வியந்தார். அவர் சொன்னது இதுதான்: "இதற்கு இன்றைய தொழில்நுட்பம் தேவையில்லை, நம் முன்னோர்களின் துல்லியமான கணிதமே போதுமானதாக இருந்திருக்கிறது. இது அதிசயம் இல்லை, இது நுட்பம் (Precision)!"


*2.உண்மையை உளவு பார்த்த அதிகாரி*


உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அலெக்சாண்டர் ஜேக்கப் எனும் கிறித்தவ அதிகாரி ஒரு கேள்வி கேட்டார். அவர் பல ஆண்டுகளாக இந்தக் கோவிலை ஆய்வு செய்தவர். "ஒரு வருடம் என்பது 365 கால் நாட்கள் என்பதை ஐரோப்பா 1554-ல்தான் கண்டுபிடித்தது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோவிலில் அது செதுக்கப்பட்டிருக்கிறது. இதை எத்தனை இந்துக்கள் அறிவார்கள்?" என்று வேதனையோடு கேட்டார்.


"இந்தக் கோவில் வெறும் கற்களால் ஆனது அல்ல; அது உங்கள் உடலின் வரைபடம். உங்கள் முதுகெலும்புதான் ஏழு அடுக்குக் கோபுரம். உங்கள் மூச்சுதான் அந்தச் சூரியன். நீங்கள் உங்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்து, உங்கள் முதுகெலும்பை நம்பி ஓய்வெடுத்தால், உங்களைச் சுற்றி என்ன மழை பெய்தாலும் உங்கள் உள்ளே இருக்கும் கருவறை எப்போதும் அமைதியாகவும், காய்ந்தும் இருக்கும்!".


*நன்றி: ராஜா சிதம்பரம் ஐயா அவர்களின் அற்புதமான பதிவில் இருந்து...*

         *- சித்தர்களின் குரல்.*

How to Draw Ganesha





 

Peter Pandian


 

Thursday, February 26, 2026

Monday, February 23, 2026

தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.


அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ "சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள். பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.


நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராத விதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? 


மனதை திடப்படுத்திக் கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன்.  இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்" என்கிறார். அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.


பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது. ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார்.


ஆண்டுகள் உருண்டன...


பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. 


இது 1918 ஆம் ஆண்டு...


எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. 


கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)


பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.


ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர்.  பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.


ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார். "நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார்" ஹெர்பெர்ட் ஹூவர். பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி

அவரை அணைத்துக் கொள்கிறார்.


காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.


தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?


இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.


ஏனெனில்… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை..


பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே… காலம் குறித்து வைத்துக் கொண்டது....


(உண்மை சம்பவம்)

தர்ம சிந்தனையை பற்றி

அறம் வழியில் வாழ 

குழந்தைகளுக்கு சொல்லி

கொடுங்கள் . குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்.


மீள் பதிவு.


🙏 நற்காலை வணக்கம் 🙏

Careful while scanning qr code


 

5 pranayamas for everyday peace


 

Saturday, February 21, 2026

Hinduism - Economy around Temple



Source  
  




 

Sanskrit Learning tools

WEBSITES TO LEARN SANSKRIT

 1.  CENTRAL SANSKRIT UNIVERSITY  120 sanskrit lessons

 2.  Learn Sanskrit Be Modern  There are 105 videos which was originally telecasted in Doordarshan.

 3.  NARAVANI  This is a site which gives information in sanskrit, besides helpful in learning

 4.  SANSKRIT SHRI CHITRAPUR MUTT  229 lessons to learn Sanskrit.

 5.  SANSKRIT FOR SHASTRA  95 Videos of about an hour each enabling us to understand Sanskrit.

 6.  प्रारम्भिक-रचनानुवाद-कौमुदी ( New Course )  183 youtube lessons best learnt with the specified Book.

 7.  link to various vibhaktis  This is culled from Sanskritdocuments.org website, which is useful

 8. Vedic Heritage - Kumud Singhal  23 youtube videos for learning Sanskrit

 9   Dictionary - English - Sanskrit  Dictionary for both languages 

10  Learn Sanskrit by Prof. Narasing Rao  learn with the help of 600 videos

11  Chandamama magazine in Sanskrit - some issues  Eight old chandamama issues in Sanskrit

12   Facebook link to learn Ashtadhyayi  A hekpful way to learn Ashtadhyayi

13  Guide to Samskrita bharati (Pravesha, Parichaya, Shiksha, Kovida)  Related Youtube links which would be helful for Pravesha, Parichaya, Shiksha, Kovida)

14  Sriram School of Sanskrit lessons in Youtube

15  learnsanskrit.cc/  a site to be in touch with Sanskrit, sandhi etc.

16  Basic Sanskrit for Vedanta by Praveen R. Bhat those who know a bit of Sanskrit, with 15 videos you get very good info





Veda

 1.  Advaita bharati - Gita - West Membalam  239 videos in Tamil with detailed upanyasam.

 2.  Devi Mahtmyam  Parayanam in full in youtube

 3.  Sundara kandam Recitation in Youtube with Sanskrit lyrics



Miscellaneous

1.  Python for Beginners - tutorial  Learn python in youtube


   



        




Friday, February 20, 2026

Kashi - a panaramic view

 



(Received in WhatsApp)

NRIs - Don't Loose your ancestral property


https://www.instagram.com/reel/DPoMEpzD7B-/?igsh=dTRxN2w4cWxqeHR3

 

Thursday, February 19, 2026

Do not get angry - learn to behave



 https://www.threads.com/@hardikupsyndrome/post/DU7DnQOkstV?xmt=AQF0DMw3plsHKiO3u6Py1kMHirvnYsgoeJSTi-69eo0ySvbNJC4urRa-zSO3dFNbOebADsoV&slof=1


 

சென்னையில் நவக்கிரகங்கள் வழிபாடு

 *நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!* 


சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். *இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.* இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. 


இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 


*1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)*


மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.


*2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)*


மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. 


அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.


*3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)*


'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக கருத்து நிலவுகிறது.


*4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)*


மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலையில்) காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும். 


*5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)*


இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.


*6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)*


மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.


வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். *வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.* மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.


*7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)*


மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில்  தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார்.  


எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.


நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும் விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வீடு கிடையாதல்லவா?


*8. அருள்மிகு முண்டக கண்ணியம்மன் (ராகு ஸ்தலம்)*


திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகக்கண்ணியம்மன் ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


*9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)*


துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.


10. சென்னையின் சிறப்பு மிக்க  திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.


சைவ அடியார்களுள் ஒருவரான  ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.


இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும் திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

Tuesday, February 17, 2026

English Puns

 ENGLISH AT ITS BEST*


*English Puns*


She fell in love with a *Banker* but he showed no *lnterest.*


She fell in love with an *Astronaut* but he wanted *Space.*


She fell in love with a *Gym Trainer,* but it didn't *Work out.*


She fell in love with a *Librarian,* but his time was always *Booked.*


She fell in love with an *Electrician* but for him there was no *Spark.*


She fell in love with a *Cardiologist* but he broke her *Heart.*


She fell in love with a *Geologist* but the relationship was too *Rocky.*


She fell in love with an *Economist* but he couldn’t supply her *Demands.*


She fell in love with a *Violinist* but he said, *"No Strings attached."*


She fell in love with the *Linguist* but he left her *Speechless.*


She fell in love with a *Seismologist* but he was always finding *Fault.*


She fell in love with a *Cook* but he left her on the back *Burner.*


She fell in love with a *Mathematician* but she couldn't *Count* on him.


She fell in love with a *Scuba diver*--on the surface everything seemed to be fine, but Deep down she knew something *Fishy* was going on ...


She fell in love with a *Fisherman* but he wasn't a good *Catch.*


She fell in love with a *Mason* but they never built a strong *Foundation.*


She fell in love with a *Teacher* but he had no *Class!*


She fell in love with a *Tennis player* but *Love meant nothing* to him.


She fell in love with the *Magician* but he kept turning *Tricks.*


She fell in love with a *Lawyer* but he never took her to the *Bar.*


She fell in love with a *Recovery agent* and he *Seized* her


😆At last she fell in love with *An ED officer* and got *Attached...*

பழையன கழிதல்

 வேலை செய்து கட்டாய ஓய்வு திணிக்கப் பெற்ற பொருட்கள்.


"இப்பொழுதெல்லாம் வயசான மனுஷாளை யாரும் மதிப்பதில்லை.." என பெரியவர்கள் அலுத்துக்கொள்வது சகஜம். 


மனிதர்களுக்கு மட்டுமா இந்த வயசு, மதிப்பு...??


அவர்கள் வாங்கிய பொருட்களை யாரும் மதிப்பதுமில்லை, உபயோகிப்பதுமில்லை.. 


ஆம்! அதற்கும் வயசாயிடுத்தே..!!


2008-ல் வாங்கிய சோனி 28′' அருமையான, பெரிய ஸ்கிரின் டிவி. 


"இது இடத்தை அடச்சிண்டு இருக்கு..???!! மார்க்கெட்ல சூப்பர் டிவியெல்லாம் வந்திருக்கு தெரியுமா..?"


என பிள்ளைகள் நச்சரித்ததால்,


'சரி, வாங்கி இத்தனை வருஷமாச்சே..'னு கடைக்காரரிடம் எடுத்துண்டு போக,


”மேடம், இது ரொம்ப பழைய மாடல் டிவி..!!!!  (பார்டா) ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்குறேன். ஆனால் இங்கே புது டிவி வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபர்.." 


( என்னது..?? சுளையா 35,000 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய டிவி, வெறும் ஆயிரம் ரூபாய்க்கா..?) 


"நன்னாத்தானே வேலை செஞ்சுண்டு இருக்கு. அது பாட்டுக்கு ரூமில் இருக்கட்டும்பா..'’ என்றேன், பிள்ளையின் முறைப்பை அலட்சியப்படுத்தி.. 


எங்கள் ரூமில் அடைக்கலமானது அந்த பழைய டிவி..


80,000 ரூபாயில் வாங்கிய புது ‘வால் மௌண்ட்’ டிவி ஹாலில் அட்டகாசமாய் தொங்கியது. ரூமிலிருக்கும் டிவிக்கும் ‘கேபிள் பில்’ கட்டணும் என்பதால் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தோம்.


ஃப்ரிட்ஜ்* நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் அதுவும் ஓல்டாம்.


20,000 கொடுத்து வாங்கிய ஃப்ரிட்ஜை பெரிய மனசு வைத்து வெறும் 500 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டான் கடைக்காரன்.


45000-ல் வீட்டிற்குள் வந்த "டபுள்டோர் ஃப்ரிட்ஜ்" கண் சிமிட்டியபடி கம்பீரமாய் நின்றது.


பழைய ஃப்ரிட்ஜை கடைக்காரர் எடுத்துண்டு போக,  'இத்தனை வருஷம் உழைத்த எனக்கு இவ்வளவுதான் மதிப்பா..?' என அது கேட்பது போல் பார்க்க, பாவமாக இருந்தது எனக்கு.


18,000 ரூபாய் கொடுத்து வாங்கிய VCR-ல் வெறும் 10 படம் தான் பார்த்திருப்போம். நல்ல கண்டிஷனில் உள்ளது. ஆனால், யாருமே வாங்க மறுத்ததால், "ஸ்கிராப்” பிலும் போட மனமில்லாமல், அதுவும் என் ரூமில் பெருமூச்சுவிட்டபடி உட்கார்ந்திருந்தது.


“ஃபோன், லேப்டாப், Tab என எங்கும் கேமரா தான். போட்டோ, செஃல்பி கலாச்சாரம் தான் எல்லா பக்கமும். இதில், இவ்வளவு பெரிய கேமராவை எடுத்துண்டு போய் யார்மா படம் பிடிப்பது..??”


50,000 ரூபாய் கொடுத்து வாங்கிய வீடியோ கேமரா, அதர பழசு என பட்டம் வாங்கி, கவரில் கண்மூடி என் ரூமில் பத்திரமாய் தூங்குகிறது.


பிலிப்ஸ் 3 in1டேப் ரெக்கார்டர், எத்தனை முறை மதுரை மணி ஐயர், MSS, MLV இவர்கள் பாடல்கள் மட்டுமில்லாமல் TMS, P. சுசீலா, ஜேசுதாஸ், PB ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா  இவர்கள் பாடல்களையும்  கேஸட்டிலிருந்து சுவாசித்து மனதை தென்றலாய் வருடியிருக்கும்..?!! அதுவும் கேஸட்டுகளுடன் ஒரு அட்டைப் பெட்டியில் முடங்கியே கிடக்கிறது.


“அம்மா, யார்மா இப்போதெல்லாம் 'டெக்' யூஸ் பண்றா..?? வால் மௌண்ட் டிவி பக்கம் 'டெக் ஸ்பீக்கர்' ரெண்டுமே போண்டா மாதிரி இருக்கு..!" 


(ஏண்டா, எங்கேடா இவ்ளோ பெரிய போண்டா போடறான்னு கேட்க முடியாது என்பதால் வாயை அடக்கிக் கொண்டேன்)


"அசிங்கமா இருக்கு..! அதில் நாம் பாட்டும் கேட்பதில்லை, போடுவதுமில்லை. சும்மா ‘டஸ்ட்”அடஞ்சுண்டு.." என முணுமுணுத்தப்படி “OLX” ல் போட ‘டெக்கை பையன் போட்டோ பிடிக்க, நான் குறுக்கே நின்றேன்.


”டேய், 30 ஆயிரம் ரூபாய்டா.. லோன் போட்டு உங்கப்பா எனக்கு ஆசையாய் ‘கிப்ட்’ செய்த ‘டெக்’குடா.. இப்போ பாட்டு கேட்கலேன்னா என்ன..? என்னிக்காவது யூஸ் ஆகும். ஓரு ஞாபகமா இருக்கட்டுமே.." என்று கூறியதில் 


“என்னமோ செய்..” என்று கோபமாக கூறி இரண்டு பெரிய ஸ்பீக்கருடன் கூடிய ‘டெக்’கை அட்டை பெட்டியில் போட்டு என் ரூமில் வைத்து விட்டு போனான் சீமந்தப் புத்திரன்.


இப்போது, ஹால் பளிச்சென்றிருந்தது. என் அறையோ பல அட்டைப்பெட்டிகளுடன் ஒரு மினி கிடங்காகியது.


அது மட்டுமா..??


ஏசியும், ஃபேனும் ரூமில் இருக்கும் பட்சத்தில், எனக்கு கிஃப்டாக வந்த ஒரு ‘பெடஸ்டல் ஃபேனும்’, ஒரு ‘டேபிள் ஃபேனும்' பேரிச்சம் பழத்திற்கும் லாயக்கில்லாமல் என் ரூமில் ‘தேமே’வென ஆடாமல் அசையாமல் நின்றன.


டிவி, டெக், விசிஆர், கேமரா மட்டுமா வெளிநடப்பு செய்தன..?


டெஸ்க்டாப், டவர் அதுவும் ‘டேபிள்’ளுடன்.. தெரிந்த நண்பரின் டிரைவருக்கு இலவசமாய் போயிற்று. 


எங்கள் டிரைவரிடம் ஏற்கனவே இருக்காம்..


என்னிடம் சொல்லவுமில்லை, ரூமில் இடமுமில்லை.


(சொன்னால் அதுவும் என் ரூமில் அடைக்கலமாகுமே என்கிற எண்ணம்) 


புது லேப்டாப்பும், Tab-பும் வீட்டில் குடிபுகுந்தன.


கட்டிலில் ஏறி கூடப் படுக்க முடியாமல், இடமில்லாமல், ரூமைச் சுற்றி டிவியும்,

ஃபேனும், டெக்கும், அட்டைப்பெட்டிகளாக இருந்ததால் கடுப்பாகி விட்டார் என் கணவர்.. 


அவரின் கோபத்திற்கு, முறைப்பிற்கு ஏன் ஆளாவானேன்...!!!??


என்ன செய்யலாம்...??


இத்தனை அருமையான பொருட்களை 500, 1000 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு நாம் கொடுப்பதை விட, நம் வீட்டு வேலைக்காரிக்கு கொடுத்தால்...??!!!


கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு போவாள் என்று நினைத்து,


”செல்வி, இந்த டிவி, டெக், ஃபேன் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஐட்டம். உனக்கு வேணும்னா நீ எடுத்துப்போய் ஜாக்கிரதையா வெச்சுண்டு யூஸ் பண்ணு.." ஜாடையாய் சொன்னேன்.


(ஆனந்தத்தில் திக்கு முக்காடி நன்றி சொல்லி விட்டு எடுத்துட்டுப்போய், ஒரு வருடத்திற்கு சம்பளம் வாங்காம வீட்டு வேலை செய்வாள் என எதிர்ப்பார்த்தேன்)


நெனப்பு தான்..


“துட்டுக்காம்மா..!!” என்று கேட்டுபடி வந்தவள், அவற்றை பார்த்தவுடன்..


“அம்மா, சும்மா கொடுத்தா கூட இது வேண்டாம்மா.." எனக் கூறி பகபகவென சிரித்தாள்.


“நான் என்ன பணமா கேட்டேன்..? என்னடி சிரிப்பு..!!?? இதெல்லாம் நல்லா வேலை செய்யும். ரொம்பவும் அருமையான பொருள், தெரிஞ்சுக்கோ.." என்றேன் சற்று கோபமாக,


“அதுக்கில்லமா, எங்க வீட்டிலயே இரண்டு டிவி இருக்கு. எங்க வீட்டுக்காரர் தவணை முறையில் சுவத்துல தொங்கிற டிவி ஒன்றை வாங்கினார். எலக்சன் சமயத்தில் வந்த இரண்டு டிவியில், எங்க அம்மா ஒன்னை எனக்கு கொடுத்துட்டாங்க. என் வீடும் சின்னது. அதுல நீங்க கொடுக்கும் இம்மாம் பெரிய டிவியை எங்கு வைக்கறது..?? வேண்டாம்மா, கடையில் போட்டா நானூறோ, ஐநூறோ கொடுப்பாங்க, பழசானாவே இந்த எலக்ட்ரானிக் அயிட்டங்களுக்கு விலையில்லைம்மா..” என்று மறுபடியும் 'கெக்கே பிக்கே'னு சிரித்தாள்.


எனக்கோ, ‘இன்ட்டிமேட்டான, சென்டிமெண்டான இந்த விஷயம், யாருக்கும் புரியலையே..! எல்லோருக்கும் சிரிப்பா இருக்கே..!' என வருத்தமாக இருந்தது.


எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமா மாறியது..? கிச்சனில், தேங்காய் துருவல் எங்கு போச்சுனே என்றே தெரில. 


(தேங்காய் யூஸ் செய்யாதப்போ துருவல் எதற்கு..?)


ஸ்டீல் காபி பில்டர் போய் காபி மேக்கர் வந்தது. இப்போ அந்த ரெண்டும் இருக்குமிடமே தெரியல. 


ஒன்லி க்ரீன் டீ தான்..


வெட்கிரைண்டர், மாதத்திற்கு ஒரு முறை அமாவாசை அன்று இட்லி, தோசைக்கு அரைக்க யூஸ் ஆனது. இப்போ அந்த “டில்டிங்”கிற்கும் வேலையில்லை. காலையும் நானே, மாலையும் நானே என சப்பாத்தி.. அதுவும் “சுக்கா” தான் சமையலறையில் சுத்தி சுத்தி வருது. இல்லேனா பாக்கெட் ரெடிமேட் அரிசி மாவு..


புட்டு குழாய், சேவை நாழி, தளி வடாம் ஸ்டேண்ட், சாம்பார் வைக்கும் பெரிய கெட்டி பாத்திரம், (திருச்சியில் வாங்கியது) ரசம் வைக்கும் கும்பகோணம் ஈயச்சொம்பு, முறுக்கு நாழி, பொறந்தாத்து சீதன உருளி 

வெங்கலப்பானை, இன்னும் பல பொருட்கள்…


(எல்லாமே செல்வியும், கடைக்காரரும் வேண்டாம் என சொல்லியது)


பரண் இல்லாததால் இல்லாததால் (வீடுகளில் “லாப்ட்”டே இல்லையே) என் கட்டிலுக்கடியில் சாக்கு மூட்டையில் தூங்குகின்றன.


சென்டிமென்ட்டாகவும், வாஞ்சையாகவும் அவைகளைப் பார்த்தபடி ஆசையாய் துடைத்து துடைத்து போர்த்தி வைக்கிறேன்.


அன்று நம்கூட இருந்து, வேலை செய்து, நம்மை மகிழ்வித்தவை தானே இவை அனைத்தும்..!!


ஹும்…!!!


இன்று, கட்டாய ஓய்வு திணிக்கப்பட்ட  முதியவையாக  ஆகிவிட்டன.


நாமும் ஒரு நாள் இப்படி ஆகிவிடுவோம் என்பதில் சந்தேகமில்லை.

Friday, February 6, 2026

திவ்ய தேசங்கள்

 *படித்துச் சுவைத்தது* 


ஸ்ரீவைஷ்ணவரே!

இன்று உமக்கான தளிகை எங்கள்  திருமாளிகையில்தான்!

மறுக்காமல், மறக்காமல் ஆத்துக்காரியும் அழைச்சுண்டு இன்று மதியம் எங்கள்

அகத்திற்கு வாரும்!!


பாகவத பிரசாதம்! மறுக்கத்தான் முடியுமா?


தன்னவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டுஅழைத்தவர் வீட்டிற்கு

விருந்துண்ணச் சென்றார் அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!


நல்ல மரியாதை செய்து இருவரையும் அமர வைத்து விருந்துண்ணச் செய்தார் அழைத்த வைஷ்ணவர்!!


வயிறு நிரம்பியதா? ஸ்ரீவைஷ்ணவரே!


மனதும் நிரம்பியது! வைஷ்ணவரே!

விழுந்து விழுந்து கவனித்த உம் பேரன்பிலே நாங்கள் விழுந்தே போனோம்!!


எங்காத்து தளிகை எப்படி?


பகவானின் பிரசாதம் அது! வார்த்தைகளுக்குள் அடங்காதது! அருமை என்ற

ஒற்றைச் சொல்லில் அதன் சுவையை நான் உணர்த்திவிட முடியாது! கவியாகப் பாடட்டுமா?


அத்தனைச் சிறப்பாய் இருந்ததா தளிகை? ஓய்! பொய்யொன்றும் இல்லையே? கவிதைக்கு பொய் அழகு! அதனை நானும் அறிந்துள்ளேன்! உம் கவியும் பொய்தானோ?


அதில் பொய்யே இருக்காது! கேட்டுத்தான் பாருமே!


*கண்ணமுது கோவில்!*

*கறியமுது விண்ணகர்!*

*அன்னமுது வில்லிப்புத்தூர் ஆனதே!*

*எண்ணும் சாற்றமுது மல்லை!*

*குழம்பமுது குருகூர்!*

*பருப்பதனில் திருமலையே பார்!!*


அவரது திருவடிகளில் விழுந்து சேவித்தார் விருந்து  கொடுத்தவர்!


எங்காத்து தளிகையில் இத்தனைத் திவ்யதேசமா?


கண்களில் நீர் பனிக்க வந்தவர்களை வழியனுப்பி வைத்தார்!


ஏன்னா! கோபிச்சுக்காதீங்கோ! கவி பாடும் அளவிற்கா அவாத்து தளிகை இருந்தது? நானும்தான் தினமும் எத்தனையோ செய்கிறேன்! ஒரு திவ்யதேசமும் காணோமே?


அடியே மண்டு! நமக்கு நாமே பாராட்டிக் கொள்வதற்கு பெயரா தாம்பத்யம்? என் சுவை நீயறிவாய்! உன் குறை நானறியேன்! அந்தப் பாட்டுக்கு உனக்கு அர்த்தம் புரியலையா?


அந்த அளவுக்கு ஞானம் இருந்தால் உங்காத்துக்கு நான் ஏன் வாக்கப்படப் போகிறேன்? நான் மண்டுதான்! நீங்களே சொல்லுங்கோ!!


கண்ணமுது கோவில்! கண்ணமுது என்றால் பாயசம்! கோவில் என்றால் ஸ்ரீரங்கம்! அரங்கன் கோயிலில் பாயசம் மண் சட்டியில்தான் வைப்பார்கள்! அதனால் பாயசம் சற்று  அடிபிடிப்பது என்பது அங்கே தவிர்க்க முடியாத ஒன்று! இங்கேயும் பாயசம் அடிப்பிடித்து இருந்ததால் கண்ணமுது கோவில்!!


அப்படியான்னா! அடுத்தது! அடுத்தது!


கறியமுது விண்ணகர்! கறியமுது என்றால் காய்கறி வகைகள்! விண்ணகர் இருக்கும்

ஒப்பில்லாத பெருமானுக்கு நைவேத்தியம் எதுவிலும் உப்பே சேர்க்க மாட்டார்கள்! இவாத்து கறியமுதிலும் இன்று உப்பில்லை! அதனால் கறியமுது விண்ணகர்!!


அருமைன்னா! அப்புறம்... அப்புறம்...


அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே! ரங்கமன்னாரின் கோயிலிலே அன்னம் குழைந்தே இருக்குமாம்! இங்கேயும் சாதம் குழைந்தே இருந்ததனால் அன்னமது வில்லிபுத்தூர்!!


இப்படியும் உண்டா? அடுத்தது... அடுத்தது.....


சாற்றமுது மல்லை! சாற்றமுது என்றால் இரசம்! மல்லை என்றாலோ கடல்! கடல் நீரைப் போல அவாத்து சாற்றமுதிலும் உப்பே அதிகம்!!


ஏன்னா! கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க! அடுத்தது என்ன?


குழம்பது குருகூர்! குருகூரிலே எது பிரசித்தம்? நம் ஆழ்வான் இருந்த புளியமரம்தானே!

குருகூர் என்றாலே புளிதான்! அவாத்து குழம்பிலும் வெறும் புளிதான்!!


கடைசியையும் சொல்லிவிடுங்கள்!!


பருப்பதில் திருமலை! திருமலை முழுவதும் கல்தான்! அவாத்து பருப்பு முழுதும் கல்லும் இருந்ததே?


ஏன்னா நன்னாவா இருக்கு! இப்படியா பாடிவிட்டு வருவீர்? அர்த்தம் புரிந்தால்

அவர்கள் தவறாக உம்மை எண்ண மாட்டாரோ? 


அடியே! கட்டாயம் எண்ண மாட்டார்! பாகவத சேஷம் என்று அந்த உணவினை

அவர்கள் குடும்பம் முழுதும் இந்நேரம் உண்டிருப்பர்! அந்த உணவினில் அவர்கள்

சுவைகளைக் கட்டாயம் கண்டிருக்க மாட்டார்கள்! நான் சொல்லி வந்த திவ்ய தேசங்கள் மட்டுமே அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!


இனி வெறும் சாதமல்ல அது! இந்நேரம் அது பிரசாதமாய் மாறியிருக்கும்!!


சரின்னா! என்னை மன்னித்து விடுங்கள்! ஒன்று கேட்கிறேன்! கட்டாயம் செய்வீர்களா?


கட்டாயம் செய்கிறேன்! என்ன வேண்டும் உனக்கு?


நல்ல தமிழ்  சொல்லித் தருகின்ற ஒரு ஆசான் வேண்டும்! நான் தமிழ் கற்க வேண்டும்! நாளை என் சமையலில் எந்தத் திவ்யதேசம் மறைந்து வருகிறது என நானும் அறிய வேண்டும்!

*The medicine is yours, but the law is theirs*

 *The medicine is yours, but the law is theirs*

*A wake-up call for Indian patients traveling abroad.*


*Dr. Manthan Sheth*

Health Times, Darpan, Gujarat Mitra, 14/01/2026


Last week, a piece of news kept echoing in my mind. An ordinary Indian citizen suffering from severe back pain traveled abroad carrying **Tramadol**, a medicine prescribed by his doctor in India. At the airport, he was stopped. Questioned. Investigated. And within minutes, he went from being a “patient” to an “accused.” Today, that person is in jail.


He had no intention of smuggling.

He was not selling drugs.

He was merely carrying medicine to relieve his pain.


But in that country, **Tramadol is classified as a narcotic drug**.


This raises a critically important question:

Do we really know that a medicine which is a “treatment” for us can become a **crime** in another country?


Countries change, laws change. Medicines do not.

In India, we treat medicines very casually. A doctor prescribes them, we buy them from a medical store, keep them at home, and even carry them while traveling. The problem begins when we assume that **India’s legal perspective applies across the world**. In reality, India’s drug control laws are one thing; those of the UAE, Japan, Singapore, Saudi Arabia, Qatar, Indonesia—every country—are different.


A medicine that is a **Schedule H** or a **prescription drug** in India may be considered a **narcotic** or **psychotropic substance** elsewhere. The law does not look at the medicine—it looks at the **risk*.


There are many such medicines, but **Tramadol** is an excellent example. Millions of patients in India use it. However, in the UAE, Egypt, Indonesia, and Saudi Arabia, it is an **opioid narcotic**. Mere possession can lead to imprisonment. In the recent case, the person had only 10–15 tablets. There was no commercial intent. Yet for the law, **the mere presence of the drug was enough**.


The argument “My doctor prescribed it, I have a prescription” does not work abroad. Many people believe, “If I have a prescription, there won’t be any problem.” But in many countries, even with a prescription, the medicine may still be illegal. Why? Because those countries view such medicines in terms of **drug abuse, illegal trade risks, smuggling, public safety threats, and intoxication**. The law does not see you as a patient—it sees you as a **possessor of a controlled substance**.



Which medicines most commonly trap Indian travelers?


**Yes—this is a red alert. Check these medicines carefully before traveling abroad.**


Indian travelers most often face trouble due to certain medicines that are commonly used in India but are considered *narcotic, controlled, or illegal* in many countries.


* **Tramadol**: A common painkiller in India, but classified as a narcotic drug in many countries. Mere possession can lead to jail.

* **Codeine-based cough syrups**: Widely consumed in India, but registered as opioid drugs in many countries and strictly controlled as addictive substances.

* **Alprazolam**: Used for anxiety and sleep; considered a psychotropic drug in many countries, and bringing it without government permission can be a crime.

* **Diazepam**: Prescribed for sleep and muscle relaxation; classified as a controlled drug in many places, requiring special permission.

* **Zolpidem**: Very commonly used in India for insomnia, but in some countries it is outright *banned**. 

* *Pregabalin*: Used for nerve pain and diabetic neuropathy; restricted in many countries and illegal without specific limits and permissions 

* In addition, some *ADHD medications* that are legal in India with a doctor’s prescription are completely **illegal* in several countries.


And sadly, many of these medicines are commonly found in our homes. These are just a few examples—not a complete list.


✈️ What happens at the airport?


Your baggage is scanned. If a medicine is found and its name appears on the narcotics list, you are taken aside. Questioning follows. Then investigation. Detention. And after that, a legal case begins.


You may explain:

“I was in pain.”

“Please speak to my doctor—it’s his prescription.”


But the law has only one question:

*Is this medicine legal in our country?”*


If the answer is “No,” everything else becomes irrelevant.


-----------


🩺 Why am I writing this as a doctor?


Every day in my clinic, I meet many patients. I listen to their worries, dilemmas, stories, and struggles. Many say:

“Doctor, we’re going to Dubai to visit our daughter,” or

“We’re going to the US to stay with our son for a few months.”


And along with that, they ask me to prescribe sleeping pills, nerve medicines, painkillers—to carry with them. But not once does anyone ask:

*Is this medicine legal there?”*


This ignorance is the biggest danger. In just five minutes, you can protect yourself.


---


 ✅ Five steps to follow before traveling abroad:


1️⃣ **Google it.**

For example:

“Is Tramadol legal in UAE?”

Do this for every medicine and every country.


2️⃣ **Check the embassy website.**

Look for the **Prohibited medicines list.*


3️⃣ **If in doubt, change the medicine.**

Ask your doctor for a safer alternative.


4️⃣ **Carry a doctor’s letter/prescription**

in English, mentioning the **generic name**.


5️⃣ **Keep medicines in original packaging.**

Loose tablets or strips look the most suspicious.


Medicine saves the body—but in the wrong country, the same medicine can take away your freedom. Foreign travel is not just about tickets and visas; it is also about understanding the law.


If you or any family member is traveling abroad, please make them read this article. A small piece of information can save a lifetime of trouble.


Because **the medicine is yours, but the law is theirs.**

PADMASHRI TO DR. KAMAKOTI


 

Monday, February 2, 2026

Breathless Technique in Rudram Chanting... By Sikkil Sri Gurucharan


 

KRISHNA - ABCD VIDEO


 

ரமண மகரிஷி - சேஷாத்ரி சுவாமிகள் - வள்ளிமலை சுவாமிகள்

 பகவானும் வள்ளிமலை சுவாமிகளும்

மைசூர் சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள். இவர் மிகச் சிறந்த முருக பக்தர். இவருக்கு திருவண்ணாமலை சென்று ரமண பகவானை குருவாக அடைய வேண்டும்; அவரிடம் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரமணரைத் தேடிக் கொண்டு இவர் அண்ணாமலைக்கு வந்தார். ஆலயத்துக்குச் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்ட பின் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசனம் செய்யச் சென்றார். அப்போது பகவான் விரூபாஷி குகையிலும், ஸ்கந்தாசிரமத்திலும் வாசம் செய்த காலம்.


விருபாக்ஷி குகையை அடைந்தார் திருப்புகழ் சுவாமிகள். அப்போதுதான் பகவான் ரமணரும் குகையை விட்டு வெளியே வந்தார். ஸ்ரீ ரமணரின் கோவணம் மட்டுமே அணிந்த தோற்றமும், நீண்ட கைத்தடியும் அவருக்கு பழனியாண்டவரை நினைவுபடுத்தியது. பகவான் ரமணர் திருப்புகழ் சுவாமிகளுக்கு பழனியாண்டவராகவே காட்சி அளித்தார். “தென் பழனி ஆண்டவனுக்கு அரோகரா!” என்றவாறே ரமணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் திருப்புகழ் சுவாமிகள். பின் அங்கேயே பிற தொண்டர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார். ரமணரின் அன்பிற்குப் பாத்திரமானார். பகவான் சன்னிதானத்தில் முருகன் புகழ் பாடுவதே அவருக்கு நித்ய கடமையாயிற்று. பகவான் ரமணர் ஓய்வாக இருக்கும் பொழுது, கம்பீரமான தனது குரலால் திருப்புகழைப் பாடுவார். பகவான் ரமணர், சுவாமிகளை “திருப்புகழ் முருகன்” என்றே அன்புடன் அழைப்பார். ரமணரை வணங்குவதை தனது நித்ய கடமையாகக் கொண்டிருந்தார் சுவாமிகள்.


ஒரு நாள்…


பணிவிடை செய்து கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைப் பார்த்து, ரமணர், ”கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே! உடனே கீழே போ” எனக் கட்டளையிட்டார். திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னை கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ’ என நினைத்து வருந்தினார். பின்னர் ‘குருவின் வார்த்தையை மீறக்கூடாது’ என்று, நினைத்து, அவர் கட்டளையிட்டபடியே மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.


கீழே.. ஒரு குட்டையில் சேஷாத்ரி சுவாமிகள் நின்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு எருமையைக் கட்டிக் கொண்டு, அதனோடு ஏதோ பேசி கொஞ்சி கொண்டிருந்தார். உடல் முழுவதும் சேறு, சகதி.


valliramanar


திருப்புகழ் சுவாமிகள் வருவதைப் பார்த்தார் மகான் சேஷாத்ரி சுவாமிகள். உடனே குட்டையை விட்டு எழுந்து ஓடோடி வந்து திருப்புகழ் சுவாமிகளைக் கட்டிக் கொண்டு விட்டார். சேஷாத்ரி சுவாமிகளின் உடை மீதுள்ள சேறு, சகதி எல்லாம் திருப்புகழ் சுவாமிகள் மீதும் ஒட்டிக் கொண்டது. திருப்புகழ் சுவாமிகளோ ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார். சகதி வாசத்துக்கு பதிலாக எங்கும் ஒரே சந்தன வாசம். திருப்புகழ் சுவாமிகளின் மீதும் சந்தன வாசம் வீசியது. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைத் தன்னருகே இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.


“ஆத்மாத்வம் கிரிஜாமதி; ஸஹசரா; ப்ராணா; சரீரம் ஹம்  

பூஜாதே விஷயோப போக ரசனா, நித்ரா ஸமாதி ஸ்திதி…”


- எனத் தொடங்கும் சிவ மானச ஸ்தோத்திரத்திலிருந்து நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். “ஈசனே நீயே எனது ஜீவாத்மா; தேவியே நீயே எனது புக்தி! என்னுடைய உடலே உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜையே!” என்ற பொருள்படியுமான அந்த ஸ்லோகத்தின் பொருளை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளுக்கு விளக்கி அருளிய சேஷாத்ரி சுவாமிகள், “இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்.


அதற்கு திருப்புகழ் சுவாமிகள், “அமல வாயு வோடாத..” எனத் தொடங்கும் 1048-வது திருப்புகழின்


“எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்  

இதய பாவா னாதீத மருள்வாயே! “


-என்ற வரிகளைப் பாடி, பொருளையும் விளக்கினார்.


அதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், “திருப்புகழ்தான் உனக்கு இனி தாரக மந்திரம். நீ இனிமேல் உன்னுடைய சுயநலத்திற்காக என்று எந்தக் காரியத்தையும் செய்யாமல், சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். அனைத்தும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்க்கை நடத்து. நீ இனி வேறு எந்த மந்திர நூல்களும் படிக்க வேண்டாம். ஜெப, தபங்கள் என்று எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு திருப்புகழே போதும். இனி நீ எங்கு சென்றாலும் திருப்புகழ் ஒலிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.


திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒரே ஆனந்தம். சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம், “நீ இனிமேல் வள்ளி மலைக்குப் போய் தவம் செய்து கொண்டிரு. பின்னர் நானும் அங்கு வந்து சேருகிறேன்” என்று கூறி ஆசிர்வதித்தார். மகானை வணங்கி விடை பெற்ற திருப்புகழ் சுவாமிகள், குருவின் ஆணைப்படி வள்ளிமலைக்குப் போய் தவம் செய்து வரலானார். அது முதல் அன்பர்கள் அனைவராலும் அன்புடன் “வள்ளிமலை சுவாமிகள்” என அழைக்கப்பட்டார்.


ரமணரை குருவாக அடைய நினைத்தார் திருப்புகழ் சுவாமிகள். ஆனால் அவருக்கு சேஷாத்ரி சுவாமிகள் குருவாக அமைந்தார். ஒருவர் எப்படிப்பட்ட பக்தராக இருந்தாலும், சீடர் குருவைத் தேர்ந்தெடுக்க முடியாது; குருவே தமக்கான சீடரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகிறது.எல்லாம் அவன் செயல்.