A small request

Please visit the site of an NGO at NOIDA, near Delhi, India and help them by clicking the following link http://Saikripa.org If possible please do help them much as u can!Thanks Thanks

Sunday, November 30, 2025

மாத்ரு ஷோடசி ஸ்லோகங்களும் அதன் பொழிப்புரையும்

 காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது


அப்போது  அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...  


சிறிது நிதானமாகப் படியுங்களேன். உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும் உங்கள் தாயை நினைத்து.


கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்


விஷ்ணு பாதம் 


பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  

 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.


ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.


ஜீவதோர்  வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  

கயாயாம் பிண்ட தாணாத்

த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய


'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

 

 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். 

ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)


இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 


1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 


4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'


7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 
.


10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'

12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.


13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 

15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 


16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

 மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன்)


(வாட்ஸ் அப்பில் வலம்  வந்தது)

Monday, November 17, 2025

मेरी शिक्षा सेवा अभी भी जारी

 😂😂😂😂😂😂😂

एक सम्मानित स्कूल मास्टर जी ने अभी-अभी रिटायरमेंट लिया था। 🎓

वे और उनकी पत्नी भोपाल के एक फ्लैट में रहते थे। 🏠😉


दशहरा आने पर उन्होंने अपने गृहनगर जाने का निश्चय किया। 💥🔥🔥


रवाना होने से पहले मास्टर जी ने सोचा —

“हमारे रहने पर तो कोई डर नहीं,

पर अगर हमारी गैरमौजूदगी में कोई चोर घर में घुस गया तो❓

वह अलमारी तोड़ देगा, सब सामान इधर-उधर फैला देगा,

जबकि घर में पैसे वैसे कुछ हैं ही नहीं!” 😅


तो घर को नुकसान से बचाने के लिए,

उन्होंने अलमारी का ताला खुला छोड़ा और मेज पर *₹1000* रखे 💸

और साथ में एक पर्ची भी रखी। 📝


“प्रिय अज्ञात चोर,”


आपको मेरे घर में घुसने के लिए की गई मेहनत पर हार्दिक बधाई! 🥰🥰🥰

पर दुर्भाग्यवश मैं एक मध्यमवर्गीय व्यक्ति हूँ,

जो केवल अपनी पेंशन पर गुजर-बसर करता है। 😅

इसलिए घर में कोई कीमती सामान नहीं है।


मुझे अफसोस है कि आपकी मेहनत और कीमती समय व्यर्थ जाएगा। 😔

इसलिए आपकी मेहनत के सम्मान में

यह *₹1000* स्वीकार करें। 


साथ ही, आपके “पेशे” (चोरी 😜) में

अधिक सफलता पाने के लिए कुछ सुझाव नीचे दिए गए हैं 👇

मास्टर साहब की “सलाह” इस प्रकार थी: 😂👇


8वीं मंज़िल पर – एक भ्रष्ट मंत्री रहता है 💼💰

7वीं मंज़िल पर – एक धूर्त प्रॉपर्टी डीलर 🏢

6वीं मंज़िल पर – एक सहकारी बैंक का चेयरमैन 🏦

5वीं मंज़िल पर – एक बड़ा उद्योगपति 🏭

4वीं मंज़िल पर – एक प्रसिद्ध वकील ⚖️

3वीं मंज़िल पर – एक भ्रष्ट नेता 😏💍💵


“इन सबके पास सोने और पैसे के ढेर हैं।

आपकी ‘व्यावसायिक सफलता’ से इन्हें कोई फर्क नहीं पड़ेगा!

क्योंकि ये पुलिस में शिकायत भी नहीं करेंगे!” 😂😂😂

दशहरा खत्म होने के बाद जब मास्टर साहब घर लौटे,

तो उन्होंने मेज़ पर एक बड़ा बैग देखा। 🎒😲

अंदर *₹10 लाख* नकद रखे थे! 💸💸💸

और साथ में एक पत्र —


“आदरणीय गुरुजी, 🙏


आपके मार्गदर्शन और शिक्षण के लिए हार्दिक धन्यवाद! 👏👏

मैंने आपकी सलाह मानकर काम किया और मिशन सफल हुआ! 😄

आभार स्वरूप यह छोटी-सी भेंट स्वीकार करें।


आपका आशीर्वाद और ज्ञान

आगे भी यूँ ही मिलता रहे...


आपका शिष्य – चोर 😄😄”


मास्टर जी ने पत्र पढ़ा और हँसते हुए बोले —


“अय्यो! मैंने सोचा था मैं रिटायर हो गया हूँ,

पर लगता है मेरी शिक्षा सेवा अभी भी जारी है!” 📚🤣💥


(Received in WhatsApp)

Thursday, November 13, 2025

Tuesday, October 28, 2025

முருகன் அபூர்வ தோற்றத்தில் காட்சி தரும் கோவில்கள்

 

முருகன்

முருகன் அபூர்வ தோற்றத்தில் காட்சி தரும்  கோவில்களை பற்றி பார்க்கலாம் வாங்க

 

 குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள்.

 

முருகனின் அறுபடை வீடுகள் மிகவும் சிறப்பானது ,  

 

சில இடங்களில் மட்டும் மிக அரிதாக தோற்றத்தில் காட்சி தருகிறார் எம்பெருமான் முருகன்

முருகப் பெருமான் குழந்தை வடிவேலன், வேடுவன், சன்னியாசி, நாக சர்பம் , தவசி, லிங்க ரூபம் என வித்தியாசமாக  காட்சி தருவதுடன் முருகன் சிலையில் வியர்க்கும் அதிசயம் சிக்கலில் காணலாம்.

 

அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள் :

 

1. முருகப் பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தரும் தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழி.

 

2. சனி ஸ்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப்  கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

 

3. சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் முருகன் காட்சி தருகிறார் . இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது இன்னொரு அதிசயம்

 

4. வழக்கமாக அம்மனுக்கு தான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

 

5. கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

 

6. திருவையாறு ஐயாரப்பர் சன்னதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் தனுசு சுப்ரமண்யராக முருகன் அருள் பாலிக்கிறார்.

 

7. திருப்போரூரில்  முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்துல இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்கும் தயாராவதை போல காட்சி தரும் முத்துக்குமார சுவாமி .

 

8. நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில்  முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

 

9. மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்தி  தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

 

10. மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில்  நெய்குப்பை எனும் ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக  காட்சி தருகிறார்.

 

11. திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.

 

12. புதுக்கோட்டைக்கு அருகே ஒற்றைக் கண்ணனூரில் , ஒரு கையில் ஜப மாலையுடனும், மறு கையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார் முருகன்.

 

13. கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவிலில் முருகன் பாம்பு வடிவில் காட்சி தருகிறார் . இந்த பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதுமில்லை, பாம்பை யாரும் துன்புறுத்துவதும் இல்லை.

 

14.கனககிரி தலத்தில் முருகன் பெருமான் கையில் கிளியுடன் காட்சி தருகிறார்.

 

15. செம்பனார்கோவில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலையுடன், தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பாகும்.

 

16. கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் எனும் ஊரில் மாமன் திருமாலைப் போல் முருகப் பெருமானும் கையில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார் .

 

17. பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் வில், அம்புடன் காட்சி தருகிறார்.

 

18. ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை என்னும் இடத்திலுள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடிவேல் வடிவில் வேலவனாக காட்சி தருகிறார் .

 

19. பெரம்பலூர் அருகில் செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.

 

20. நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி  பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

 

21. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி  நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன்  காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக இங்கு தரிசிக்க முடியும்.

 

22. சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறும் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.

 

23. ஈரோடு மாவட்டம் காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைப்பதைப போல முருகன் காட்சி தருகிறார்.

 

24. நாகப்பட்டினம் திருவிடைச்சுழியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும், தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.

 

25. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி, மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கி நிற்பது அதிசயமான காட்சியாகும்


(Recd in whatsapp)

 

 

Friday, October 17, 2025

பாட்டியின் பொன்மொழிகள்

 * பாட்டி அடிக்கடி சொல்லுவாள் *


நீரால் கோலம் போடாதே

நெற்றியைக் காலியாய் விடாதே

குச்சியைக் கொளுத்தி வீசாதே

இரவில் ஊசியை எடுக்காதே


கால் மேல் காலைப் போடாதே

காலையில் அதிகம் தூங்காதே

தொடையில் தாளம் போடாதே

தரையில் வெறுதே கிடக்காதே


மலஜலம் அடக்கி வைக்காதே

நகத்தை நீட்டி வளர்க்காதே

ஆலயம் செல்லத் தவறாதே

அதிகமாகப் பேசாதே


எண்ணெய் தேய்க்க மறக்காதே

சந்தியில் நீயும் உண்ணாதே

விரிப்பைச் சுருட்ட மறக்காதே

பகலில் படுத்து உறங்காதே


குளிக்கும் முன்பு புசிக்காதே

ஈரம் சொட்ட நிற்காதே

நாமம் சொல்ல மறக்காதே

நல்ல குடியைக் கெடுக்காதே


தீய வார்த்தை பேசாதே

நின்று தண்ணீர் குடிக்காதே

எதையும் காலால் தட்டாதே

எச்சில் பத்தை மறக்காதே


எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே

எந்தன் குடியில் மூத்தோரே

எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே

என்றும் வளமாய்த் தீர்வோரே


*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*


நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்


+

(வாட்ஸ்அப் உபயம்)

Tuesday, October 14, 2025

வங்கி அதிகாரியின் பார்வை (வாட்ஸ் அப் உபயம்)

 *ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவரின் அனுபவ வரிகள். படிக்கும் போதே நாம் எப்போது ஓய்வு பெறுவோம் என்கிற எண்ணம் கண்டிப்பாக வரும் படியுங்கள்*


இன்று செப்டம்பர் 30.


எல்லோருக்கும் மறக்க முடியாத நாட்கள் நிறையவே இருக்கும். 

அதில் மகிழ்ச்சியான நாட்கள் எப்போதும் மனதில் நிற்கும். 

அது முதன் முதலில் காதலை சொன்ன நாட்களாக இருக்கலாம். 


தன் காதலியின் இல்லை மனைவியின் பிறந்த நாளோ இல்லை தங்களின் குழந்தைகளின் பிறந்தநாளாக இருக்கலாம் ‌


எனக்கு இதையெல்லாம் தாண்டி  எனக்கு இதில் முதல் இடம் பிடிப்பது தான் செப்டம்பர் 30.


சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு 

எனக்கு பரிபூரண விடுதலை கிடைத்த நாள் அது.

அதுவரை நான் என்ன பேச வேண்டும்,

யாரிடமும் பேச வேண்டும், எப்போது வரவேண்டும்,, 

யார் உள்ளே வந்தாலும் நானே அவர்களிடம் வலிய சென்று வணக்கம் போட்டு பேச வேண்டும். வந்தவர் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்றாலும் அவர் பேசுவதை பொறுமையாக கவனிக்க வேண்டும்.


அவர் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பதற்காக, நான் எப்போதும் பேசுவது போல் அவர்களிடம் நான் இயல்பாக பேச முடியாது, பேச ஆரம்பிக்கும் போதே எனது பேச்சில் பணிவினை காட்ட வேண்டும்.


 அங்கே சும்மா இருந்தால் கூட அவசரத்திற்கு வீட்டுக்கு வர வேண்டும் என்றால் அந்த  தகவலை மேலே வரை சொல்லி அனுமதி வாங்க வேண்டும்.


கிட்டத்தட்ட ஏசி உள்ள சிறைச்சாலை போன்று தான் நான் அங்கு சிறைப்பட்டு இருந்தேன்.


செப்டம்பர் 30 அன்று தான் இந்த கிளி தன் தங்க கூட்டை விட்டு தன் சுற்றத்தோடு வானில் சுதந்திரமாக பயணத்தை தொடங்கிய நாள்.


ஆமாங்க, இந்த செப்டம்பர் 30, 2021 லில் தான் நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள்.


அதுவரை அடுத்தவர்களின் தங்க முட்டைகளுக்கு , கோடிக் கணக்கான பணத்திற்கு அடை காத்த பொறுப்பில் இருந்து விடை பெற்று, 


நான் என் சொந்த கூட்டுக்கு வந்தேன் நான் அங்கு அடை காக்க இல்லை நான் அடைக்கலமாக எனது குடும்பத்திடம். 


வேலை பார்க்கும் போது கோடிக்கணக்கான பணத்தை நான் பார்த்த போது வராத சந்தோஷம் இப்போ இந்த நான்கு  ஆண்டுகளாக என் சட்டைப் பையில் இருந்த சில  நாணயங்களை  எண்ணும் போது கிடைத்தது.


அந்த கோடி ரூபாய் என்பது ஊருக்கு நிஜம் என்றாலும் அது எனக்கு மாயை. 

இந்த சில நூறு ரூபாய் நோட்டுகளே எனக்கு நிஜம் என்பதை இப்போ உணர்கிறேன்.


அந்த அதிகாரம், சுற்றி இருக்கும் ரூபாய் நோட்டு கட்டுகள் எல்லாம் கடல் தண்ணீர் போல என்னதான் பெரியதாக இருந்தாலும் நான் என் தாகத்திற்கு சில சொட்டுகள் கூட குடிக்க முடியாது.  எனக்காக செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

 இப்போதுதான் அது தொகை குறைவு என்றாலும் கடல் அளவு மகிழ்ச்சி அடைகிறேன்.


விடுமுறை நாட்கள் மட்டுமே  நான் வெளியூருக்கு போக பழகிய நான் அதாவது பெயிலில் ஊருக்கு சென்று வருவது போல் வந்தவன் இப்போ நினைத்த நேரத்தில் ஊருக்கு போக 

உறவினரோடு பேசவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


நாளுக்கொரு புது சட்டை போடும் பழக்கத்திலிருந்தும் 

 தினமும் முகச்சவரம் செய்யும்

வேலையிலுமிருந்தும் ஒதுங்கிவிட்டேன்.

ஆமாம், நான் யாருக்காக வெளி வேஷம் போட வேண்டும். தேவைப்பட்டால் இப்போ என்னை அலங்காரம் செய்து கொள்கிறேன், ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் கூட போட்டுக் கொள்கிறேன். மற்ற நேரங்களில் வெறும் கைலியில் என்னை 

முடக்கிக் கொள்கிறேன்.


பெருமைக்காக பெரிய மாலுக்கு போவது இல்லை. பெட்டிக் கடையிலோ இல்லை அண்ணாச்சி கடையிலோ என் தேவை பூர்த்தி ஆகிறது.


சாப்பிட்டதும் ஹோட்டலில் டிப்ஸ் கொடுப்பதை

நிறுத்தி விட்டேன் - வீதியில் கை நீட்டுபவனுக்கு

சில்லறையாவது கொடுக்கிறேன். 


ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய்க்கு மேல் சூ வாங்கிய நான் இப்போது போட்டு இருக்கும் செருப்பு வெறும் இருநூறு ரூபாய் என்றாலும் இன்னும் தேயாமல் இருக்கிறது நான்கு வருடங்கள் ஆகியும்.


காலில் சூ போட்டுக்கொண்டு நான் நடந்து போனதை விட இப்போது இந்த தேய்ந்த செருப்பில் நான் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.


இந்த சமூகம் என் வெளித் தோற்றத்திற்கு தான் மதிப்பு தரும் என்று நான் இருந்து,

இப்போ தான் உண்மையினை 

உணர்ந்தேன், நான் யார் என்று.


இப்போது எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கின்றேன்,

எந்த வேண்டுதலும் இல்லாமல்,

அதனாலேயே

கேட்காமலே கிடைக்கின்றது.


ஆமாம் நினைத்த நேரத்தில், விரும்பிய ஊருக்கு கோவிலுக்கு செல்கிறேன், நிஜமாகவே சாமி கும்பிடும் போதே நிம்மதி அடைகிறேன், பணியில் இருக்கும் போது ஒரு நாள் லீவு வேண்டும் என்றால் கூட ஒரு வாரம் முன்பே அனுமதி பெற வேண்டுமே‌


இப்போதெல்லாம்

காரை நானே ஓட்டுகின்றேன். அப்போ பேச்சு துணைக்கு கூடவே என் மனைவி. போகும் போது என் மனைவி இன்னும் கொஞ்ச தூரத்தில் அந்த கோவில் வரும், இந்த தோப்பு வரும் என்பாள். 


 எத்தனையோ முறை அதை கடந்து நான் சென்று இருந்தாலும், இப்போதுதான் முதல் முறை பார்ப்பது போல் பார்க்கிறேன் இப்போ மனதில் வேறு அலுவலக நினைவுகள் இல்லை என்பதால்.


நேரத்துக்கு தூங்குகிறேன் - எந்த தூக்க மாத்திரையும் சாப்பிடாமல். தொலைபேசியை அலாரத்துக்காகவும் பயன்படுத்துகிறேன். 

முன்பு செல்லில் பேசும் போது, யார் பேசுவது என்ற பயந்திலே போனை எடுத்தவுடன் இப்போது சுதந்திரமாக போனில் பேசுகிறேன், எந்த என் உயர் அதிகாரியும் இப்போ என்னோட பேச வாய்ப்பு இல்லை என்பதால்.


முன்பு கேட்ட இளையராஜா பாடல்கள் இப்போது இருமடங்கு மகிழ்ச்சி தருகிறது,

ஆமாம் இப்போ நான் யார் பேசுவதையும் கேட்க தேவையில்லை என்பதால்.


இனி என் கையில் 

மீதம் இருக்கின்ற ஒவ்வொரு ரூபாய்யும் 

ஒரு லட்சம் மதிப்பாக உணர்கின்றேன்.


இனி ஒவ்வோரு என் விடியலும்

இறைவன் எனக்கு  தந்ந போனஸ் தான்


இன்றோடு நான்கு  ஆண்டுகள் ஆகிறது நான் எனக்காக வாழ்க்கையில் வாழத் தொடங்கி ஆனால் நாற்பது ஆண்டுகள் எனக்காக வாழ்ந்த மகிழ்சியை உணர்கிறேன்.


எப்போ பயணம் முடியும் என்று தெரியாது அதுவரை அந்த நொடி வரை மகிழ்ச்சியாக இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் ஏன் என்றால் எனது மனதில் எந்த அழுத்தமும் இல்லை என்பதால்.


சுருக்கமாக சொன்னால் எனக்கு வயது 64 முடிந்தாலும்,

இப்போ வெறும் 4 வயது குழந்தை மனதோடு நான் வாழ ஆரம்பித்து இருக்கிறேன்.

 


இதுவரை  வீட்டில் முன் வாசலில் 

நந்தியாவட்டையிருப்பதே நான் கவனித்ததே இல்லை, இப்போ தினமும் ஆனந்தத்துடன் அந்த பூக்களைப் பறித்து

அதை அழகாக நூலில் கட்ட பழகுகிறேன்.


மனைவி மூட்டு வலியால் விந்துவதை

இப்போதுதான் கவனிக்கின்றேன்,

வாலினியும், மகாராஜா தைலம் இப்போ ஒவ்வொ௫ மாதமும் தி௫ப்பதி மெடிக்கலில்

மற்ற ம௫ந்துகளோடு வாங்கப்படுகின்றது.


மொட்டை மாடியை சுத்தம் செய்கின்றேன்,

இதுவரை பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைத்துவிட்டு, அந்த பறவையினை விட வேகமாக வங்கிக்கு பறந்தவன்,


இப்போ ஓரமா நின்னு,

காக்கை வந்ததா, கு௫வி வந்ததா, அந்த அணில் வந்ததா என ஆவலோடு பார்த்து நிற்க்கின்றேன், அது சாப்பிட்ட பின்புதான்

கீழே இறங்குகின்றேன்.


தினமும் அந்த காக்கா அதான் தன் கால் விரல்களை இழந்த காக்கா வந்து சாப்பிடும் வரை நான் காக்காவிற்கு காவல் இருக்கிறேன்.


நானே  போய் பேப்பர் வாங்குகின்றேன், பால் பாக்கெட் வாங்கும் போது.

ஒ௫ நாள் தினத்தந்தி,மறு நாள் தினமனி.


பேப்பர் கடை அ௫கில் இ௫க்கும்

ரோட்டு ஓர தள்ளுவண்டி கடையி்ல்

தினமும் ஐந்து ப௫ப்பு வடை வாங்குகின்றேன்

சுவையோ,அந்த   சரவணபவனை மிஞ்சுகின்றது.


அவசர பொட்டுக்கடலை கருவேப்பிலைகூட நானே வாங்க ஓடுகின்றேன், இளம் வயது பையன் போல, அப்போ கையில் டயர் ஓட்டிக்கொண்டே சென்றேன், இப்போ நிஜ ஸ்கூட்டி வண்டியிலே.


 தேங்காய்களை நானே உடைத்து,

அதன் தண்ணீரை சிந்தாமல் டம்பளரில் பிடித்து ஒரே மடக்கில் குடிக்காமல்,

நான்கு ஐந்து முறை வாயில் ஊற்றிக்கொள்கின்றேன்.


மாதத்தில் முதல் வாரமே ரேஷன் கடைக்கு போகிறேன். அங்கே கோதுமை போடவில்லை என்றா்ல்,

கோதுமை அடுத்த வாரம் வ௫மா என கேட்கிறேன்.

கோதுமையும், பச்சரிசையும் அந்த வாரமே

பல்லக்கு ரோட்டில் உள்ள ரைஸ்மில்லில் அரைத்து வ௫கின்றேன்.


இது வரை ரைஸ்மில் சத்தம் இரைச்சலாக தெரிந்தது,

இப்போ ஒ௫ புதிய ஸ்வரமாக, அதுவும் ரைஸ்மில் ஓட ஆரம்பித்தவுடன் வ௫ம் சத்தம் 

உய்...உய்.. கேட்க அங்கயே நிற்கின்றேன்.


தினந்தோறும்,

கடமையாக காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு போய் , உடல் அங்கே இ௫ந்தாலும், மனசு மட்டும் நேற்று வந்தாரே அந்த ஸ்டேட் பேங்கு ரிடையர்டு மேனேஜர் சொன்னது போல் பணம் போட வ௫வாரா,

முதல் வேலையாக பேங்கு போனவுடன் அவருக்கு போண் பன்னனும் என மனதி்ல் முடிவு எடுபேன்.


இப்போ , கோவிலில்

செண்பகவல்லி அம்மன் எந்த கலரில் பட்டுப்புடவை கட்டி இ௫ப்பார் என பார்க்க தூண்டுகின்றது,

அதுவும் நிதானமாக பத்து மணி்க்கு கோவிலுக்கு  போகும்போது.


நேற்று வரை  ஹிட்லராயிருந்தவர் இப்போ

சார்லி சாப்ளின் மாதிரி.


இப்போவெல்லாம் ஓடைப்பட்டி வினாயாகர் கோவிலிக்குபோகும் போது,

சாமிக்கு பூக்கள் வாங்கும் போது

அந்த மல்லிகை பூவில் ஒ௫ ஓராமாக வெட்டி வாங்குகின்றேன்,

என் மனைவிக்கு.


அதோடு இப்போ தான் என் மனைவியின் காதில் எந்த கம்மல் போட்டு இருக்கிறார் என்பதை கவனிக்கிறேன், இப்போது தான் என் மனைவியின் கம்மல் அழகாக இருப்பதை இப்போ உணர்கிறேன் ஏன் என்றால் வேலையில் இருக்கும் போது தங்கத்தின் அழகினை ரசிப்பதே இல்லை,

அதன் தரத்தை தான் ஆராய்ந்து இருக்கிறேன்,

தங்க நகை கடன் தருவதற்கு.


வாழ்க்கை இன்னும் அழகாக, நமக்காக

வேலை ஓய்வுக்கு பின்னரே.


செப்டம்பர் 30,

மறக்க முடியாதே.


என் தலையில் இருந்த

மேலாளர் என்ற கிரீடம் 

இறக்கிய நாள் ஆச்சே.


ஆமாம் மற்றவர்களின் பார்வைக்கு 

அது வைரமாக தெரிந்தாலும்,


சுமந்தவன் எனக்கு தான் தெரியும்,

அது முள் கிரீடம் என்று.


.